பினாங்கு மாநில தேர்தல்: 6 இடங்களில் அம்னோ போட்டி

வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ள பினாங்கு மாநிலத் தேர்தலில் பினாங்கு அம்னோ 40 இடங்களில் 6 இடங்களில் போட்டியிடும் என்று பினாங்கு அம்னோ இணைப்புக் குழுத் தலைவர், டத்தோ மூசா ஷேக் ஃபட்ஸிர் தெரிவித்தார்.

பெர்மாடாங் பெரங்கான், சுங்கை துவா, பெனாகா, பெர்டாம், சுங்கை ஆச்சே மற்றும் தெலுக் பஹாங் ஆகிய ஆறு இடங்களே கேள்விக்குரிய இடங்கள் என்று அவர் கூறினார்.

தற்போது தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக மூசா மேலும் கூறினார்.

இளம் வேட்பாளர்களை மையப்படுத்தி, அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய முகங்களைக் கொண்ட ஒரு கலவையை அவர்கள் இந்த தேர்தலில் களமிறக்கப் போவதாக அவர் கூறினார்.

பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் (EC) கடந்த புதன்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here