3R (மதம், ராயல்டி மற்றும் இனம்) பிரச்சினைகளைத் தொட்டதாகக் கூறப்படும் மூன்று அரசியல் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
கெடா மந்தரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர், டிஏபி தலைவர் லிம் குவான் எங் மற்றும் பாஸ் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகிய மூன்று தலைவர்கள் மீதான விசாரணை ஆவணங்களை அடுத்த வாரம் அட்டர்னி ஜெனரல் அறையில் போலீசார் சமர்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். அவர்கள் மூவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன, நாங்கள் விசாரணை ஆவணங்களை விரைவில் தலைமை வழக்கறிஞர் அறைக்கு அனுப்புவோம், ஒருவேளை அடுத்த வாரம் என்று அவர் இன்று கிளந்தான் போலீஸ் படைத் தலைமையகத்தில் மாநிலத் தேர்தல் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருனும் உடனிருந்தார். 3ஆர் வழக்குகள் மீதான விசாரணைகள் குற்றவியல் சட்டம், தேசத்துரோகச் சட்டம், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஸாருதீன் கூறினார்.