வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் என்கிறார் பிரதமர்

வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்து இன மக்களுக்காகவும், ஒரு இனத்தவர் மட்டுமல்ல என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

ஒரு இன சமூகத்தின் நலன்களை மட்டும் தான் பாதுகாப்பதாக சில தரப்பினர் கூறுவதை தாம் அறிவதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், மத்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

மலாய்க்காரர்கள், இந்தியர்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்று என்னிடம் கேட்காதீர்கள்.  ஒரு தொகை உள்ளது, பெயர்கள் சான்றளிக்கப்பட்டால், நாங்கள் உதவுவோம். அனைத்து கடினமான ஏழைகளுக்கும் உதவுவோம். அனைத்து மலேசியர்களுக்கும் அவர்களின் இனத்தைப் பொருட்படுத்தாமல் நாங்கள் உதவுவோம்,என்று அவர் இன்று இரவு இங்கு இந்திய சமூகத்துடனான சந்திப்பின் போது கூறினார்.

குறிப்பிட்ட சில கட்சிகளின் குறுகிய மனப்பான்மை கொண்ட இன உணர்வுகளை தான் எப்போதும் எதிர்ப்பதாக அவர் கூறினார். இந்திய சமூகத்தின் ஆதரவிற்கு அன்வார் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் திட்டமிடப்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேறுவதை உறுதிசெய்ய ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குமாறு கெடாவில் உள்ள இந்தியர்களை வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக தோட்டங்களில் வசிப்பவர்கள் வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றும் அவர் நம்புகிறார்.

நிகழ்ச்சியில், எஸ்பிஎம் தேர்வில் சிறப்பிடம் பெற்ற சுங்கைப்பட்டாணியை சேர்ந்த மாணவர்களுக்கு அன்வர் விருதுகளை வழங்கினார். பொருளாதார, சமூக மற்றும் கல்விப் பிரச்சனைகள் தொடர்பாக கெடா இந்திய சமூகத்திடம் இருந்து அவர் ஒரு குறிப்பையும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here