91 வயதான தனது தாய்க்கு முகத்தில் காயம் ஏற்படும் வரை அடித்த குற்றச்சாட்டிக் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
60 வயதுடைய சந்தேக நபர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் செலாங்கவுவில் உள்ள நீண்ட வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக முக்கா மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் முஹமட் ரிசல் அலியாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 14 ஆம் திகதி இரவு 11 மணியளவில் சிலாங்கு போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியதை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் செலாங்காவ் ஹெல்த் கிளினிக்கில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“நேற்று பேஸ்புக்கில் வைரலான 26 வினாடி வீடியோவையும் போலீசார் இனங்கண்டுள்ளதாகவும், அதில் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை தனது கைகளால் அடிப்பதைக் காட்டுகிறது,” என்றும் அவர் கூறினார்.







