ஜாசினில் ஃபெல்டா துன் கஃபர் புக்கிட் செங்கேயில், சுமார் RM23 மில்லியன் மதிப்புள்ள கோழிப் பண்ணையை மத்திய நில மேம்பாட்டு ஆணையம் உருவாக்குகிறது, இது அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் என்று, ஆசாஹான் சட்டமன்ற உறுப்பினர் ஃபைருல் நிஜாம் ரோஸ்லான் கூறினார்.
இந்த திட்டம் மே மாதம் தொடங்கப்பட்டது என்றும் , அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“எட்டு ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட கோழிப்பண்ணையின் உற்பத்தி சுழற்சி முறையில் 580,000 குஞ்சுகளை வளர்க்க முடியும்.
நாட்டின் கோழி இறைச்சி உற்பத்தித் துறையில் உணவுப் பாதுகாப்பை நிவர்த்தி செய்ய இந்தத் திட்டம் ஆண்டுக்கு 0.1 சதவீதம் அல்லது 3.48 மில்லியன் கோழிகள் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
சுற்றுச்சூழலுக்கு அதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்த ஹஸ்ரின், கோழிப் பண்ணையை நிர்வகிப்பதில், துர்நாற்ற மாசுபாடு மற்றும் ஈக்கள் இருப்பது ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளை ஃபெல்டா சமாளிக்க வேண்டும்,
மூடிய கோழிக்கூடுகளால் துர்நாற்றம் மாசுபடுவதைக் குறைக்க முடியும் என்றும் பண்ணை வீடு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.









