இந்தோனேசியாவில் சுற்றுலா படகு கடலில் மூழ்கியதில் 7 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்பு

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கராவில் உள்ள மேற்கு மங்காரையில் சனிக்கிழமையன்று (ஜூலை 22) அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில் ஏழு மலேசிய சுற்றுலாப் பயணிகள் குழு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11:45 மணியளவில் நிகழ்ந்தது என்றும் படகு மாண்டா முனையிலிருந்து பிங்க் கடற்கரையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் மற்றொரு படகால் இழுத்துச் செல்லப்பட்டபோது சுழலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம், பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியது.

மேலும் “பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” என்று தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here