கோலாலம்பூர்:
சீனாவின் குவாங்சோவைச் (Guangzhou) சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், மனிதனைப் போலக் கருத்தரித்து, குழந்தை பெறும் திறன் கொண்ட ஒரு ரோபோவை (“pregnancy robot”) உருவாக்கி வருகிறார். இந்த ரோபோவுக்கு, ஒரு செயற்கைக் கருப்பை (artificial womb) பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருப்பையில், ஒரு கருவை 10 மாதங்கள் வரை சுமந்து, குழந்தை பெற முடியும்.
ஒரு குழாய் மூலம், செயற்கைக் கருப்பைக்குள் ஊட்டச்சத்துகள் வழங்கப்படும்.
கைவா டெக்னாலஜி (Kaiwa Technology) நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஜாங் கிஃபெங் (Dr Zhang Qifeng), இந்தத் தொழில்நுட்பம் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளது என்று கூறினார்.
அத்துடன், கர்ப்ப காலத்தில், மனிதர்களுக்கும் ரோபோவுக்கும் இடையே உள்ள தொடர்பை இது சாத்தியமாக்கும் என்றும் அவர் கூறினார்.
ற
அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ரோபோவின் விலை, சுமார் 100,000 யுவான் (RM59,000) ஆகும். அமெரிக்காவில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு, 200,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும்.
அதை ஒப்பிடுகையில், இந்த ரோபோவின் விலை மிகவும் மலிவானது.
இந்தத் திட்டம், சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலர், இதை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கின்றனர். வேறு சிலர், இது மனித குலத்தின் வளர்ச்சிக்கு எதிரானது என்று விமர்சித்துள்ளனர்.





















