புருணை சுல்தான் சுல்தான் ஹசனல் போல்கியா அடுத்த வாரம் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று (ஜூலை 28) இரவு அறிவித்தார்.
புருணை சுல்தானின் இந்தப் பயணத்தின் போது, முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் உட்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், இது நாட்டுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.
“நான் பிரதமராக பதவியேற்றுள்ள இந்த எட்டு மாதங்களில், புருணை சுல்தான் இரண்டு முறை மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம், முதலீடுகள் முக்கியம், ஏனென்றால் முதலீடுகள் இல்லை என்றால் பணம் இல்லை,” என்று அவர் மடானி ஒற்றுமை சுற்றுப்பயணத்தில் பேசும்போது அவர் கூறினார்.