மாநில தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன்; அன்வார்

போர்ட்டிக்சன்: பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வேட்பாளர்கள் தேர்வில் மகிழ்ச்சியடையாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் எந்த தேர்தலுக்கும் முன்பு பொதுவான பிரச்சினையாகும் என்றார். பிரதமராக இருக்கும் அன்வார், வரும் மாநிலத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் சிறந்த முறையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த உலகில், குறிப்பாக தேர்தல்களின் போது, எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அனைவரையும் ஒரே சமயத்தில் மகிழ்விக்க முடியாது. எனவே நாங்கள் கேட்போம், மதிப்போம், அதே போல் சரியான முடிவுகளை பெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இது அனைவரின் சிறந்த நலனுக்காக செய்யப்பட்டதாக நான் நம்புகிறேன் என மாநிலத் தேர்தலுக்காக நெகிரி செம்பிலானில் ஆறு ஜசெக வேட்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பிறகு அவர் கூறினார்.

இதுபோன்ற பிரச்சினைகள் கட்சிக்கான ஆதரவைத் தடம் புரளச் செய்யுமா என்று கேட்டபோது, பிகேஆர் தலைவரான அன்வார், இதுவரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறினார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு மற்றும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், இன்று அன்வாரிடமிருந்து தங்கள் கடிதங்களைப் பெற்ற வேட்பாளர்கள் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் (சிகாமாட் சட்டமன்றம் -Sikamat), தெங்கு சாரா தெங்கு சுலைமான் (அம்பாங்கான் சட்டமன்றம் – Ampangan), நூர் ஷுனிதா பேகம் (பிலா சட்டமன்றம் – Pilah), இஸ்மாயில் அஹ்மாட் (லாபு சட்டன்றம் -Labu), இயூவ் பூன் லாய் (சுவா சட்டமன்றம் -Chuah) மற்றும் டாக்டர் இராஜசேகரன்  ( ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றம் -Sri Tanjung) ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here