64வது பிறந்தநாளைக் கொண்டாடும் பேரரசருக்கு பிரதமர் வாழ்த்து

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) தனது 64-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இதயப்பூர்வமான வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேரரசர் அல்-சுல்தானுக்கு “அல்லாஹ் சுப்ஹானாஹு வதாலாவின் அருளால் மாட்சிமை தங்கிய பேரரசர் எப்போதும் தெய்வீக அருள் மற்றும் வழிகாட்டுதலுடன் , நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் இறையாண்மையை அனுபவிக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்,” – என்று, பிரதமர் அன்வார் தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here