சைபர்ஜெயா ஆரம்பப்பள்ளியில் விஷம் கலந்த உணவருந்திய 24 மாணவர்கள்

சைபர்ஜெயா: சைபர்ஜெயாவில் ஜூலை 27 அன்று விஷம் கலந்த உணவருந்திய 24 ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. துணை சுகாதார அமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சௌனி கூறுகையில், மாணவர்கள் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தினர். ஆனால் அவர்கள் குணமடைந்து பள்ளிக்கு திரும்பினர்.

அவர்கள் ஒரு தனியார் கிளினிக்கில் மருத்துவ சிகிச்சை பெற்றனர் என்று அவர் கூறினார். உணவு விஷத்தின் மூலத்தை வெளிப்படுத்தவில்லை. நேற்று, பள்ளியின் சிற்றுண்டி சாலையில் இருந்து நாசி லெமாக் மற்றும் ஃபிரைடு சிக்கன் சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அமைச்சகம் விசாரித்து வருவதாகவும் பள்ளி சிற்றுண்டி சாலை ஆகஸ்ட் 10 வரை மூடப்பட்டுள்ளதாகவும் லுகானிஸ்மேன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here