கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்டு 3 :
கடந்த எட்டு ஆண்டுகளாக பெண் ஒருவரின் கன்னத்தில் வளர்ந்து வந்த சதைக் கட்டி, இறுதியாக லஹாட் டத்து மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவின் வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையால் அகற்றப்பட்டது.
நூர் பத்மா ஜிம்லானி என்ற பெண்ணுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ப்ளோமார்பிக் அடினோமா – உமிழ்நீர் சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோய் அல்லாத கட்டியால் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.
இது ஒரு சிறிய கச்சான் போன்ற அமைப்பில் முதலில் தோன்றியது, ஆனால் அது நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்தது என்றார்.
“வலி இல்லை, ஆனால் அது பெரிதாகி 1 கிலோ எடையை எட்டியது, ஏனெனில் இது எனது அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது” என்று 36 வயதான அவர் கூறினார்.

லஹாட் டத்து மருத்துவமனை இயக்குனர், டாக்டர் ஆண்டி ஷம்சுரேசல் முகமட் சைனால் கூறுகையில், அவரும் அவரது மருத்துவக் குழுவினரும் மூன்று மணி நேர நடைமுறையில் சுமார் 1.03 கிலோ எடையுடைய அந்த சதைக்கட்டியை அகற்ற முடிந்தது என்றார்.
“குறித்த மருத்துவக் குழுவில் சண்டாக்கான், கோத்தா கினாபாலு, கெனிங்காவ் மற்றும் லஹாட் டத்து ஆகிய பகுதிகளைஹ சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர்” என்று அவர் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வாய் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் டாக்டர் ரூபிந்தரன் முத்துசாமி கூறுகையில், இந்த கட்டியை நோயாளி கவனிக்காமல் விட்டால், அவர் ஏற்கனவே எதிர்கொள்ளும் உடல்ரீதியான சவால்களைத் தவிர, எதிர்கால உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும்.
“பெரியதாக வளர விட்டுவிட்டால், நோயாளி தனது தலையை பக்கவாட்டாக திருப்புவது கடினமாக இருக்கும், மேலும் அவரது கழுத்து மற்றும் தலையின் பிற பகுதிகளில் வலி இருந்திருக்கும்,” இதுதவிர சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இரத்த நாள அடைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம் என்று அவர் கூறினார்.
நாட்டில் இதுவரை அகற்றப்பட்ட முகக் கட்டிகளில் இதுவே பெரியது என்று அறியமுடிகிறது .















