கடைகளில் அமர்ந்து சாப்பிட முடியாது- ஆனால் வாங்கி செல்லலாம்

கெரோனோ வைரஸ் தொற்று நோய் காரணமாக நாளை தொடங்கி வாடிக்கையாளர்கள் கடைகளில் அமர்ந்து சாப்பிட முடியாது. ஆனால் வாங்கி செல்லலாம் (Take away) என்று மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ அல்ஹாஜ் ஜவஹர் அலி தய்யூப்கான் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். அதே வேளை நாட்டின் பிரதமர் டான்ஶ்ரீ மொகிதீன் யாசின் அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வேளையில் நமக்கும் சமூக கடப்பாடு இருக்கிறது என்கிற வகையிலும் நாளை தொடங்கி இம்மாதம் 31ஆம் தேதி வரை இந்த Take away வசதி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 வைரஸ் தாக்கம் அதிகமாகால் இருக்க நாம் அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்போம் என்று டத்தோ கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here