ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருகிறது. இதனால் படக்குழுவினர் அடுத்தடுத்து புரமோஷன் செய்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ‘ஜெயிலர்’ பட டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார் ரஜினி. இந்தப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீசை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
பாட்ஷா திரைப்படத்தை விட ஜெயிலர் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்கிறார் பிரபல நடிகர்
அண்மையில் இந்தப்படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினி மாஸ் ஸ்பீச் ஒன்றை கொடுத்தார். காக்கா, பருந்தை வைத்து குட்டி ஸ்டோரி, சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்த சர்ச்சை உள்ளிட்ட பல விஷயங்களை இந்த ஆடியோ லான்ச்சில் வைத்து அதிரடியாக பேசினார் ரஜினி. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. ரஜினி, நெல்சன் இரண்டு பேரின் ஸ்டைலும் கலந்து வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அமைதியான குடும்பத்து தலைவனாக டிரெய்லரில் அறிமுகம் கொடுக்கும் ரஜினி, ஒருக்கட்டத்தில் அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார். இந்த மாஸான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த டிரெய்லரை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘ஜெயிலர் பட ஷோகேஸை பார்த்த பிறகு ஒரு ரஜினி ரசிகராக நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு பாட்ஷா மிகவும் பிடித்த படம். அந்தப்படம் ஏற்படுத்திய அதே உற்சாகத்தை இதுவும் ஏற்படுத்தியது.