கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் பலி

சுபாங் ஜெயா, அகஸ்ட்டு 4:

நேற்று இங்கு அருகே உள்ள USJ/Hicom கிள்ளான் சாலையில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பகுதியில் நடந்த விபத்தில், இரண்டு வங்காள தேச ஊழியர்கள் உயிரிழந்தனர்.

நேற்று அதிகாலை 2.05 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அபோலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.

அவர்கள் ஓட்டிச் சென்ற LC135 மோட்டார் சைக்கிள் பெர்சியாரன் கெவாஜிபனிலிருந்து நேராக ஷா ஆலாம் நோக்கிச் சென்றபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“USJ டோல் பிளாசாவிலிருந்து பெர்சியாரன் கெவாஜிபனுக்கு எஸ்யூவி வலதுபுறம் திரும்பியபோது, ​​அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், பின்னர் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பின் நடுவில் புரோத்தோன் எக்ஸ்50 எஸ்யூவி காருடன் மோதியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“விபத்துக்கான காரணத்தை அடையாளம் காண இன்னும் விசாரணைகள் நடந்து வருவதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் (APJ) 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும், விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள், விசாரணைக்கு உதவ, வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முகமட் ஹம்தான் ஜெரமாட்டினை 019-4642222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here