5வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற பெண்ணை மின்னல் வேகத்தில் காப்பாற்றிய போலீஸ் அதிகாரி

சிரம்பான், அகஸ்ட்டு 4:

சிரம்பானிலுள்ள வணிக வளாகத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற இளம்பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் வேகமாக செயற்பட்டதால் காப்பாற்றப்பட்டார்.

கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 2) இரவு 10 மணியளவில் இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அரிபாய் தாராவே தெரிவித்தார்.

போலீஸ் குழு அங்கிசென்றபோது குறித்த பெண், ஐந்தாவது மாடியிலிருந்து குதிக்க முயன்றதாகவும், அப்போது ஜாலான் கேம்ப்பெல் காவல் நிலையத் தலைவர், இன்ஸ்பெக்டர் ஆதி குசைனி சரிபுடின் வேகமாக செயற்பட்டு, 20 வயது பெண்ணை கீழே விழாமல் தடுத்ததாக ஏசிபி அரிபாய் கூறினார்.

“அப்பெண் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் ,” என்று, இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான சாட்சிகள் அல்லது பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 012-7707282 அல்லது 06-763 2722 என்ற நிலையத்திற்கு விசாரணையில் உதவுமாறு இன்ஸ்பெக் ஆதி குசைனியை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here