சனுசிக்கு சொந்த மெய்க்காவலர்கள் உள்ளனர் என்கிறார் ஐஜிபி

கெடா மந்திரி பெசார் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு “பாதுகாப்பு சிக்கல்கள்” தடுத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பாதுகாக்க சனுசிக்கு தனிப்பட்ட மெய்காவலர்கள் உள்ளனர் என்று  போலீஸ் படைத்தலைவர் தெரிவித்தார். சனுசிக்கு எதிராக உண்மையிலேயே அச்சுறுத்தல் இருந்திருந்தால், பாதுகாவலர்கள் கெடா காவல்துறைத் தலைவர் பிசோல் சாலேவுக்குத் தெரிவித்திருப்பார்கள் என்று போலீஸ் படைத்தலைவர் ரஸாருதீன் ஹுசைன் கூறியதால பெர்னாமா  வெளியிட்டுள்ளது.

ஆனால், தங்கள் பிரச்சாரத்திற்குச் செல்லும்போது பாதுகாப்பற்றதாக உணரும் வேட்பாளர்கள் இருந்தால், தயவு செய்து ஒரு புகாரை பதிவு செய்யுங்கள், நாங்கள் விசாரணை செய்வோம் என்று அவர் மேற்கோள் காட்டினார். ஜெனேரி தொகுதியை பாதுகாக்கும் சனுசி, பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக நேற்றிரவு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அலோர் செட்டார் எம்பி அஃப்னான் ஹமிமி தைப் அசாமுதீன் கூறியது குறித்து ரஸாருதீனிடம் கருத்து கேட்கப்பட்டது.

ரஸாருதீன் இன்றுவரை எந்த ஒரு வேட்பாளர்களும் அச்சுறுத்தப்படவில்லை என்றார். இன்று முன்னதாக, சனுசி, தான் கூட்டத்தில் இல்லாதது அச்சுறுத்தப்பட்டதாலோ அல்லது அமைதியாக இருக்கும்படி கட்டளையிடப்பட்டதாலோ இல்லை என்று மறுத்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டது. கோலாலம்பூரில் தேசிய பாஸ் கூட்டத்திலும் மற்றும் பல கூட்டங்களிலும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று சனுசி கூறினார். நான் காரில் பயணம் செய்து தாமதமாகத் திரும்பினேன். அதனால் நான் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது என்று அவர் மேற்கோள் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here