கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 8:
கெடா, கிளாந்தான், திரெங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான 377 சட்டமன்றங்களை உள்ளடக்கிய மொத்தம் 260 வாக்குப்பதிவு மையங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன.
மேலும் கோலத் திரெங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான திரெங்கானு கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தில் மூன்று ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் (EC) இணையதளத்தின்படி, ஆறு மாநிலத் தேர்தல்களுக்கும் கோலா திரெங்கானு இடைத்தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜூன் 21, 2023 அன்று புதுப்பிக்கப்பட்ட வாக்காளர்களின் சமீபத்திய பதிவேடாகும்.
தேர்தல்களில் ஈடுபட்டுள்ள ஆறு மாநிலங்களில் மொத்தம் 49,660 இராணுவம் மற்றும் 47,728 போலீஸ் அதிகாரிகள் அவர்களது மனைவிகளுடன் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், கோலா திரெங்கானு இடைத்தேர்தலில் 1,362 காவலர்களும், 35 ராணுவ வீரர்களும், அவர்களது மனைவியுடன், ஆரம்பகட்ட வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களும் அவற்றின் இருப்பிடத்திற்கு ஏற்ப கட்டங்கட்டங்களாக மூடப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.