நெகிரி செம்பிலானில் மாயமான பெண்ணைத் தேடக் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது

சிரம்பான், ஏப்ரல் 5 :

சனிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் காணாமல் போன 50 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.

ஜெம்போல் மாவட்டப் போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் நோர்ஹிஷாம் முஸ்தபர் இது குறித்து கூறுகையில், நோரிசான் யாஹ்யா (Norizan Yahya) என்ற அந்தப் பெண் மாயமானது குறித்து இன்று காலை 8.46 மணியளவில் அவரது சகோதரி புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நோரிசானை அவரது சகோதரி கடைசியாகப் பார்த்துள்ளார்.

சனிக்கிழமை மாலை 4.44 மணியளவில் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட நோரிசான், தான் சிரம்பானில் வேலை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவரது உயரம்: 150 செ.மீ என்றும், அவரது எடை 70 கிலோ இருக்கும் என்றும், அவர் ஊதா நிற பிளவுஸ் (Purple Blouse), கருப்பு நிறப் பேண்ட் மற்றும் வெளிர் பச்சை நிறத் தலைக்கவசம் (Tudung) ஆகியவற்றை கடைசியாக அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அவர் ஒரு பழுப்பு நிற ‘Eco Shop’ பையை வைத்திருந்தார்.

இந்தப் பெண்ணைக் கண்டாலோ அல்லது இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ பொதுமக்கள் உடனடியாகப் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

• பகாவ் போலிஸ் நிலையம்: 06-4541222
• பகாவ் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (Insp Annas Fikri Othman): 013-6219196

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here