பினாங்கில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு -சோவ் கோன் யோவ்

பட்டர்வொர்த், ஆகஸ்ட் 9 :

பினாங்கு மாநிலத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடும் இரண்டு முன்னாள் DAP உறுப்பினர்களும், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒற்றுமை அரசாங்கத்தையும் பினாங்கு பராமரிப்பு முதல்வர் சோவ் கோன் இயோவின் தலைமையையும் தொடர்ந்து ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

பாகன் டலாம் தொகுதியில் போட்டியிடும் சதீஸ் முனியாண்டி மற்றும் பிறை வேட்பாளர் டேவிட் மார்ஷல் ஆகியோருடன் கூட்டாக நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், இதனைக் கூறினார்.

முன்னர் குறித்த இரு சுயேட்சை வேட்ப்பாளர்களும் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பார்கள் என்று கூறப்பட்டுவந்த நிலையில், சோவ் கோன் இயோவின் இந்த அறிவிப்பு அந்த சந்தேகத்தை முற்றாக தீர்த்துள்ளது என்றால் மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here