கோத்தா கினாபாலு, அகஸ்ட்டு 10 :
கோத்தா கினாபாலுவிள்ள லிகாஸ் விளையாடடரங்கில், நேற்று இரவு சபா எப்சி மற்றும் ஜோகூர் டாருல் தாசிம் (ஜேடிடி) அணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த போட்டியில் சபா எஃப்சி அணி முதல் கோலை அடித்த சிறிது நேரத்திலேயே, 39 வயதான அவர் இரவு 8.27 மணிக்கு மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
” உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவக் குழு குறித்த இடத்திற்கு வந்து, ஆரம்ப சிகிச்சையின் பின்னர் மேல் சிகிச்சைக்காக குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு (QEH) அவரை அனுப்பி வைத்தது.
“இருப்பினும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் கூற்றுப்படி, நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.