மாநில தேர்தல்: பாயா தெருபோங்கில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட்டு 12:

பாயா தெருபோங்கில் உள்ள SK Seri Relau வாக்குச் சாவடியில், சீல் வைக்கப்படாத வாக்குப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இடைநிறுத்தப்பட்டது, இப்போது அங்கு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி, சீராக நடைபெற்று வருகிறது.

மதியம் 1.26 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியதாக பக்காத்தான் ஹராப்பானின் பாயா தெருபோங் வேட்பாளர் வோங் ஹோன் வை தெரிவித்தார்.

முன்னதாக, பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் ஓய் நெய் ஊன் SK Seri Relau வாக்களிப்பு மையத்தில் சீல் இல்லாத வாக்குப்பெட்டியைக் கண்டுபிடித்ததாகவும், அதனுள் மொத்தம் 177 வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே பெட்டியில் போடப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

சம்பவம் தொடர்பில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், 177 வாக்குச் சீட்டுகள் செல்லுபடியாகுமா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here