கோலாலம்பூர்:
‘நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருனுக்கு வழங்கிய ஆதரவை பாரிசான் நேஷனல் மீட்டுக்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க பி.என் விருப்பம் தெரிவித்துள்ளது.
36 இடங்களைக் கொண்ட மாநிலச் சட்டமன்றத்தில் பி.என் 14 இடங்களையும், பி.என் 5 இடங்களையும் கொண்டுள்ளதால், 19 இடங்களுடன் எளிய பெரும்பான்மையுடன் புதிய ஆட்சியை அமைக்க இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளன.
சுங்கை உஜோங் மாவட்டத் தலைவர் பதவி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் மந்திரி பெசாரின் தலையீடு அதிருப்தியை ஏற்படுத்தியதே இந்த அரசியல் மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடி நகர்வு ஜொகூர், மலாக்கா போன்ற மாநிலங்களிலும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், ‘கொள்ளை புற வழியாக’ ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி மக்களின் ஆணையைத் துரோகம் செய்யும் செயல் என பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே தான், இது குறித்துப் பிரதமரைச் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.





















