பாங்காக், ஆகஸ்ட்டு 13:
பாங்காக்கின் சப்பான் சுங் மாவட்டத்தில் உள்ள சொகுசு வீட்டில் நடந்த போதைப்பொருள் கலந்த விருந்தில் பங்குகொண்ட இரு மலேசியர்கள் உட்பட ஒன்பது வெளிநாட்டினரை தாய்லாந்து போலீசார் கைது செய்தனர்.
பாங்காக் போஸ்ட் படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த சோதனையில், இரண்டு மலேசியர்கள், ஐந்து சீனர்கள் (மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்), ஒரு வியட்நாமியர் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த ஒரு ஆணும் கைது செய்யப்பட்டனர்.
வீட்டில் இருந்து உரத்த இசை ஒலிப்பதாக வசிப்பவர்களிடமிருந்து புகார்களைப் பெற்றதை அடுத்து, சொகுசு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர் என்று, பாங் சான் காவல்துறைத் தலைவர், போல் கர்னல் சிவத் ஸ்ரீவிச்சாய் கூறினார்.
அந்த வீட்டில் நடந்த சோதனையில், “ஒரு பழத் தட்டில் கெட்டமைன், எரிமின் 5 (நிமெடாசெபம்) 24 மாத்திரைகள், மற்றும் எட்டு தோட்டாக்கள் ஏற்றப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்,” என்று அவர் கூறினார்.
அனைத்து சந்தேக நபர்களும் வகை 2 போதைப்பொருள், ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டது.










