சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நள்ளிரவு நிலவரப்படி 6 மாநிலத் தேர்தலில் 146 இடங்களை பெரிக்காத்தான் நேஷனலும் 99 இடங்களை பக்காத்தான் ஹராப்பானும் கைப்பற்றியுள்ளன.
சிலாங்கூரில் பக்காத்தான் 34 இடங்களையும் பெரிக்காத்தான் 22 இடங்களையும் வென்றது.
பினாங்கில் பக்காத்தான் 29 இடங்களையும் பெரிக்காத்தான் 11 இடங்களையும் வென்றது.
நெகிரி செம்பிலானில் 31 இடங்கள் பக்காத்தானுக்கும், மீதமுள்ள ஐந்து பெரிக்காத்தானுக்கும் சென்றன.
தெரெங்கானுவில் உள்ள 32 இடங்களையும் பெரிக்காத்தான் வென்றது. கிளந்தானில் பக்காத்தான் இரண்டு இடங்களை வென்றது. மீதமுள்ள 43 இடங்கள் பெரிகக்காத்தானுக்குச் சென்றது.
கெடாவில், பெரிக்காத்தான் 33 இடங்களை வென்றது. மீதமுள்ள மூன்று பக்காத்தானுக்குச் சென்றது.









