நடிகர் சூர்யா கொடுத்த வைரல் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார், இந்த கதாப்பாத்திரம் பெறும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ரோலக்ஸ் கேரக்டரை வைத்து தனி திரைப்படம் உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா, சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார்.

அப்போது தனது அடுத்த படங்கள் குறித்து  பேசியுள்ளார். ரோலக்ஸ் கேரக்டரை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில்  நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here