கனிமம் சார்ந்த கல்வி மையம் அமைக்க பகாங் அரசு திட்டம்

குவாந்தான், ஆகஸ்ட்டு 16:

பகாங் அரசாங்கம் லிப்பிஸில் கனிமம் சார்ந்த கல்வி மையம் (Malaysia Mineral Academy Pahang (AMMP) நிறுவ திட்டமிட்டுள்ளது, இது ஏனைய கற்கைகளுடன் இணைந்து, கல்வி மற்றும் பயிற்சி திட்டங்கள் மற்றும் கனிம தொழில் சார்ந்த தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு கல்வி மையமாக செயல்படும்.

இது தொடர்பில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறுகையில், லிப்பிஸில் அமையவுள்ள உள்ள AMMP தற்காலிக வளாகம், கனிம மேம்பாடு பற்றிய தகவல்களுக்கான ஒரே ஒரு மையமாக இருக்கும் என்றும், மாநில அரசு பகாங் திறன் மேம்பாட்டு மையம் (PSDC), காணுமா கல்வி மையத்தின் (AMMP) மேமேம்பாட்டு தலைவராகவும் பகாங் அல்-சுல்தான் அப்துல்லாவை (UMPSA) ஆலோசகராகவும் நியமித்துள்ளது என்றார்.

“இந்த நடவடிக்கை பகாங் முழுவதும் பொருளாதார வளர்ச்சியை சமநிலைப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன், குறிப்பாக பகாங்கின் மேற்குப் பகுதிக்கும் கிழக்குப் பகுதிக்கும் இடையே உள்ள மேம்பாட்டு இடைவெளியைக் குறைப்பதில், இந்த முயற்சி வழிவகுக்கும் ” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here