கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 16:
இங்குள்ள ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள ஐந்து மாடி வர்த்தக கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட பீம் அமைப்பு, நேற்று இரவு இடிந்து விழுந்ததில் குறைந்தது 10 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.ஆனால் அதிஷ்டவசமாக அங்கு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஜாலான் கூச்சாய் லாமா சாலையிலுள்ள ஸ்ரீ டேசா வர்த்தக மைய கட்டிடத்தின் ஒரு பகுதி ( ஏ பிளாக்-பீம் ) இரவு 10.40 மணியளவில் இடிந்து விழுந்தது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்ததாக, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுக்கோர் கூறினார்.

“இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து மூடுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்றார்.

போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து கட்டிடம் முற்றிலும் பாதுகாப்பானது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்யும் வரை, கட்டிடத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருக்க அப்பகுதியை முடியுள்ளனர்.
“பொதுமக்களை இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து விலகி இருக்குமாறும், இது தொடர்பில் விசாரணை நடந்து வருவதால்,எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாமஎன்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.










