வாடிக்கையாளர் போல் நடித்து தங்க சங்கிலியுடன் தப்பியோடிய ஆடவர்; போலீஸ் வலைவீச்சு

சுங்கைப்பட்டாணி, Jalan Sekerat நேற்று, வாடிக்கையாளர் போல் நடித்த ஒருவர், அழகுசாதனப் பொருள் கடை உதவியாளரின் தங்கச் சங்கிலியுடன் தப்பிச் சென்றார். முன்னதாக, 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் தலைக்கவசம் அணிந்து அழகுசாதனப் பொருட்கள் கடைக்குள் நுழைந்து கடையில் பொருட்களை வாங்குவது போல் நடித்துள்ளார்.

அந்தப் பெண் தயாரிப்பு குறித்து தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை தாக்கி அவரது நகையை பறிக்கும்போது அவர்  கீழே விழுந்தார்.  38 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ நேற்று முதல் டிக் டாக் செயலியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சந்தேக நபரை போலீசார்  தேடி வருகின்றனர். நேற்று காலை 10.30 மணியளவில் பாதிக்கப்பட்ட 31 வயது நபர் கடையில் தனியாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.

சந்தேக நபர் பின்னர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது மற்றும் இழப்பு சுமார் RM3,000 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஜைதி கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 392இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here