விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அன்வார் மற்றும் ஃபஹ்மி இரங்கல்

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வியாழன் (ஆகஸ்ட் 17) ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே கத்ரி நெடுஞ்சாலையில் பீச்கிராஃப்ட் மாடல் 390 (பிரீமியர் 1) விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முகநூல் பதிவில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இந்த சோதனையை எதிர்கொள்ளும் வலிமையைப் பெற பிரார்த்தனை செய்வதாக அன்வார் கூறியுள்ளார்.

இன்று பிற்பகல் எல்மினா, ஷா ஆலத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த சோதனையை எதிர்கொள்வதில் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

ஒரு தனி முகநூல் பதிவில், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜிலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். இன்று பிற்பகல் எல்மினாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்கள். குடும்பங்கள் இந்த சோதனையை எதிர்கொள்ளும் சக்தியைப் பெறட்டும். அல்-ஃபாத்திஹா” என்று அவர் கூறினார்.

பிற்பகல் 2.40 மணியளவில் நடந்த இந்த விபத்தில் ஒரு உயரதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பயணிகள் மற்றும் இலகுரக விமானத்தின் இரண்டு பணியாளர்கள் மற்றும் அப்பகுதி வழியாகச் சென்ற ஒரு வாகனமோட்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர் என்று ஹுசைன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here