ஷா ஆலம், எல்மினா டவுன்ஷிப்பில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து காக்பிட் (cockpit) குரல் பதிவு கருவி மீட்கப்பட்டுள்ளது. விமான விபத்து புலனாய்வு பணியகம் இந்த சாதனத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார். நாங்கள் 10 உடல்கள் மற்றும் ஐந்து உடல் உறுப்புகளையும் கண்டுபிடித்துள்ளோம். உயிரிழந்தவர்களை தேடும் பணியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதே இதன் பொருள்.
உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படும் என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். முதற்கட்ட தேடுதலின் போது உடல் உறுப்புகள் ஏதேனும் தவறவிட்டதா என்பதை அறிய அப்பகுதியில் இரண்டாவது சோதனை நடத்தப்படும் என்றார். விமானத் தரவுப் பதிவுக்கான தளத்தையும் அவர்கள் தேடுவார்கள் என்று ஹுசைன் கூறினார்.









