உயர்க்கல்வி மாணவர்கள் பத்திரமாகச் சென்றடைந்தனர்

கோலாலம்பூர்:

வீடு திரும்ம்பும் கவலையில் மூழ்கிக்கிடந்த ஏழு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மொத்தம் 2,362 மாணவர்கள் தெற்குப் பயணத்தில் பத்திரமாக வீடு திரும்பினர்.

உயர்க்கல்வி அமைச்சின் அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட பொது பல்கலைக்கழகங்கள் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, யூபிஎம், யுனிவர்சிட்டி இஸ்லாம் அந்தாரா பங்சா மலேசியா (யூஐஏஎம்), யூஐடிஎம், யூனிவர்சிட்டி கெபாங்சன் மலேசியா (யூகேஎம்), யூனிவர்சிட்டி மலாயா (யூஎம்), யூனிவர்சிட்டி பெர்டஹானான் நேஷனல் மலேசியா (யூபிஎன்எம்) யூனிவர்சிட்டி டெக்னோலாஜி மலேசியா கோலாலம்பூர் (யூடிஎம் கேஎல்) ஆகியவையாகும்.

இவர்கள் 14 பேருந்துகளில் 11 இடங்களுக்குப் பயணித்த மாணவர்களாவர்., நெகிரி செம்பிலானில் மூன்று, மலாக்காவில் மூன்று , ஜொகூரில் ஐந்து பேர் பாதுகாப்பாக திரும்பினர் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யூபிஎம் துணைவேந்தர், பேராசிரியர் டத்தின் படுகா செத்தியா டத்தோ டாக்டர் ஐனி இட்ரிஸ், துணை துணைவேந்தர் (மாணவர் விவகாரங்கள், பழைய மாணவர்கள்), பேராசிரியர் டாக்டர் முகமட் ரோஸ்லான் சுலைமான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மே 2 ஆம் தேதி, யூபிஎம், பொது, தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,876 மாணவர்கள் மத்தியப் பகுதியிலிருந்து சம்பந்தப்பட்ட பேராக் மாநிலத்தின் பல இடங்களுக்கு திரும்புவதற்கான பயணமும் செயல்முறைப்படுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here