எல்மினா விமான விபத்து: பாதிக்கப்பட்ட ஷரிபுதீனின் குடும்பத்திற்கு Grab ஆதரவு

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 19 :

கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட்டு 17) நடந்த மோசமான விமான விபத்தில் பலியான கிராப் மலேசியா நிறுவனத்தின் ஓட்டுநரான ஷரிபுதீன் ஷாரியின் குடும்பத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக கிராப் மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காப்பீட்டுப் நலன்கலைத் தவிர,அதற்கு மேலாக இறந்தவராது குடும்பம் மேலும் உதவி பெறுவதை இ-ஹெய்லிங் நிறுவனம் உறுதி செய்யும் என்றும் அது கூறியுள்ளது.

கிராப் பார்ட்னர்களின் “Gakat wakalah “நிதியிலிருந்தும், கிராப் மலேசியா குழு மற்றும் ஓட்டுநர்-கூட்டாளிகளின் சமூகத்தின் பங்களிப்புகள் என்பனவும் இதில் அடங்கும் என்று அது கூறியது.

மேலும் “கிராப் குடும்பத்தின் சார்பாக, எங்கள் அர்ப்பணிப்புள்ள ஓட்டுநர் -தோழர் ஷரிபுதீன் ஷாரியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஷரிபுதீன் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு வாழ்க்கையை சம்பாதிக்க ஆர்வத்துடன் உழைத்தபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

“இந்த இழப்பின் போது உங்கள் துயரத்தில் நாங்கள் அனுதாபம் கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், துயரமான எல்மினா விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பங்களுக்கும் செல்கிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here