ஒரே ஆண்டில் 7 பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற செவிலியர்

இங்கிலாந்தில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம்  தெரிவித்த தகவலின்படி முன்னாள் செவிலியர், 33 வயதான லூசி லெட்பி ஏழு புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

ஜூன் 2015 இல் அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரவி ஜெயராம், செவிலியர் லெட்பி மீதான சந்தேகம் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார். பிறகு, லெட்பியின் கைதுக்கு வழிவகுக்கும் விசாரணை தொடங்கப்பட்டது.

2015 மற்றும் 2016 க்கு இடையில் Countess of Chester மருத்துவமனையில் பிறந்த  13 பச்சிளங்குழந்தைகளை ரகசியமாகக் கொல்ல  லெட்பி பல்வேறு முறைகளைப் பயன்படுத்தியதாக UKவின் Crown Prosecution Service (CPS) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இயற்கையான காரணம் இருப்பதாக சக ஊழியர்களை ஏமாற்றி குழந்தைகளைக் கொல்வதே அவரது நோக்கமாக இருந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மரணத்தை ஏற்படுத்த தனது கைவினைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார்.  குழந்தைகளை பராமரிக்கவும் பாதுகாப்பதற்க்கும் பயிற்சிப்பெற்ற செவிலியர் இவ்வாறு நடந்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்ப்படுதியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here