வேலை முடித்து வீடு திரும்பிய தீயணைப்பு வீரர் விபத்தில் பலி

அலோர் காஜா, ஆகஸ்ட்டு 20:

புதிதாக பணியில் இணைந்து கொண்ட தீயணைப்பு வீரர் ஒருவர், வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் மலாக்கா தெங்காவில் உள்ள Pulau Gadong Klebang Besar பகுதியைச் சேர்ந்த, 25 வயதான முஹமட் ஹஃபிஸ் முஹமட் சப்ரி என அடையாளம் காணப்பட்டார் என்று , அலோர் காஜா மாவட்ட காவல்துறை தலைவர் அர்ஷாட் அபு உறுதிப்படுத்தினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 8.20 மணியளவில் 37 வயது ஓட்டுனர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிக் கவிழ்ந்தது. கார் மோதியதில் தீயணைப்பு வீரர் சாலையோரம் இழுத்துச் செல்லப்பட்டதில், தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்தார் என்று OCPD அர்ஷாட் கூறினார்.

காரின் ஓட்டுநர் இங்குள்ள பாயா மெங்குவாங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, பாதிக்கப்பட்டவர் சாலையின் எதிர்புறத்தில், தீயணைப்பு நிலையத்தில் தனது வேலையை முடித்துவிட்டு பூலாவ் கடோங்கில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்,” என்று அவர் கூறினார்.

விபத்து நடந்த நேரத்தில் வானிலை நன்றாக இருந்தது என்று OCPD அர்ஷாட் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் கீழ் விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here