சர்வதேச உடல் கட்டழகர் மோடல் போட்டி சாம்பியன் கேடயத்தை வாகை சூடினார் பீடோரைச் சேர்ந்த பவித்திரன்

ராமேஸ்வரி ராஜா

பீடோர், ஆக. 21 :

சிங்கப்பூரில் நடைபெற்ற உடல் கட்டழகருக்கான சர்வதேச மோடல் போட்டியில் சாம்பியன் கேடயத்தை வாகை சூடினார் பீடோர் எஸ்.ஆர் ஹெல்த் பிட்னஸ் ஜிம் மையத்தில் 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்றுவரும் 28 வயதான பவித்திரன் நோக்கியா.

2022 ஆம் ஆண்டு மிஸ்டர் கோலாலம்பூர் மோடலுக்கான போட்டியில் இவர் 3 ஆம் நிலையில் வெற்றிபெற்றார். அதே ஆண்டு ‘மிஸ்டர் ஜெஆர்தி’ எனும் போட்டியில் முதல் 8 நிலைகளில் வெற்றிபெற்றார். இந்நிலையில் 2 மாதங்கள் மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளுக்குப் பின்னர் இந்த சர்வதேச போட்டியில் வெற்றிபெற்றுள்ளதாக மக்கள் ஓசைக்கு வழங்கிய தகவலில் அவர் குறிப்பிட்டார்.

“சுயத் தொழில் செய்து வருகிறேன். உடல் கட்டழகர் ஆக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருந்தேன். இந்நிலையில், பயிற்றுனர் கண்ணா தேவையான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார். உணவு பழக்க வழக்கத்தையும் திட்டமிட்டு முறைபடி மேற்கொண்டேன்” எனவும் பவித்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here