சொந்த மகளை அடித்து கொலைசெய்த முன்னாள் ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை

சிரம்பான்:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போர்ட்டிக்சன், லுகூட் என்ற இடத்தில் நடந்த சம்பவத்தில், தனது 9 வயது மகளை சித்திரவதை செய்து கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு சிரம்பான் உச்ச நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்தது.

முகமட் அப்துல்லா முகமட், 41, என்பவருக்கு எதிராக, வாதத்தின் கடைசி நாளில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்படி குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்ற நீதிபதி.டத்தின் ரோஹானி இஸ்மாயில் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் 31 ஜனவரி 2018 அன்று, ஜாலான் விஸ்டா ஜெயா 5, தாமான் விஸ்டா ஜெயா, லுகூட்டிலுள்ள அவரது வீட்டில் இரவு 8.30 முதல் 11.30 மணி வரையான காலப்பகுதியில் தனது (அப்போது) ஒன்பது வயதுடைய மகள் நூர் ஐனா நபிஹாவைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

“குற்றம் சாட்டப்பட்டவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். மேலும் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் மலேசிய ஆயுதப்படையில் பணியாற்றினார் மற்றும் சார்ஜென்ட் (வாகனம்) பதவியில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இவ்வழக்கில்”பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரின் சொந்தக் குழந்தை, அவரது மரணத்திற்கு  குறிப்பாக தலை, கழுத்து மற்றும் வயிற்றில் 32 வெளிப்புற காயங்கள் மற்றும் பல்வேறு உள் காயங்கள் என்றும், அவருக்கு தகுந்த மற்றும் அதிகபட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறினார்.

முன்னதாக சிரம்பான் (HTJS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்பது வயது சிறுமி, உயிரிழந்ததாக  1 பிப்ரவரி 2018 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here