புத்ராஜெயா:
பகாங்கில் உள்ள பெலாங்காய் மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 23 ஆம் தேதி குறித்த தொகுதிக்கான வேட்பாளர்களின் நியமனமும், அக்டோபர் 3 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பும் நடைபெறும் என, தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே கூறினார் .
அத்தோடு இடைத்தேர்தலுக்கான பிரச் சாரம் வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை 14 நாட்கள் நடைபெறும்.
“பெலாங்காய் இடைத்தேர்தலை நடத்துவதற்கு 2.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு தேவை” என்றும் அப்துல் கானி, இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் குறித்த சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தபோது பேசினார்.
கடந்த 17ஆம் தேதி பெலாங்காய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜொஹாரி ஹருன் எல்மினா விமானவிபத்தில் பலியானதைத்தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.








