சமூக நலன் முன்னெடுப்பு -இந்த ஆண்டின் சிறந்த நிறுவனமாக Magnum குழுமம்

Datuk Chan Chee Fai receiving the award from Yang Berhormat Dato’ Sri Hajah Nancy binti Haji Shukri(Group photo positioning – from left to right: 1.Dato' R. Rajendran, Chairman of CSR Malaysia 2.Yang Berhormat Dato’ Sri Hajah Nancy binti Haji Shukri, Minister of Women, Family and Community Development 3.Datuk Chan Chee Fai, Executive Vice President - Group Chief Commercial Officer of Magnum 4.Lee Seng Chee, Co-Chairman / Managing Editor of CSR Malaysia)

கோலாலம்பூர்;
கடந்த மாதம் 26ஆம் தேதி தலைநகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற 2023 சமூகநலன் முன்னெடுப்புகளுக்கான மதிப்புமிக்க நிலைத்தன்மை – நலத்திட்ட விருது நிகழ்ச்சியில் Magnum குழுமம் எண் முன்கணிப்பு செயல்பாட்டாளர் (என்எஃப்ஓ) பிரிவில் ஆண்டின் சிறந்த நிறுவனம் என்ற விருதை வென்றுள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் சமூகநலம் சார்ந்த முன்னெடுப்புகளில் Magnum நிறுவனம் அதன் சமுதாயக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக நிதி, நிலைத்தன்மை முன்னெடுப்புகள், கொள்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு முன்னெடுகளை மலேசியா முழுவதும் உள்ள கீழ்தட்டு மக்களுக்கு இந்நிறுவனம் மேற்கொண் டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் ரிங்கிட் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் சமூகம், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்களுக்கு Magnum நிறுவனம் தொடர்ந்து தனது சேவையை ஆற்றி வருகிறது.

ஐநா நிலைத்தன்மை மேம்பாட்டு இலக்கிற்கு ஏற்ப இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அதிலும் பி40 பிரிவினர், பூர்வக்குடி மக்கள், மாற்றுத் திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், அகதிகள் என நாடு தழுவிய அளவில் 26,000த்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையில் இந்நிறுவனம் உருமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு – அத்தியாவசியப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான தளவாடங்கள் என அன்பு இல்லங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் இந்நிறுவனம் ஆதரவு அளித்துள்ளது. மேலும் தரமான மருத்துவ உதவிகளையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

இதுமட்டுமன்றி Magnum நிறுவனம் 6,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கும் உதவிபுரிந்துள்ளது.

அதேவேளை கடந்த 2022ஆம் ஆண்டு தோற்று விக்கப்பட்ட Magnum தன்னார் வலர் திட்டத்தில் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 1,300க்கும் மேற்பட்ட மணி நேரத்தை செலவிட்டுள்ளனர்.

அதன்மூலம் 500 மரங்களை நடுதல், 5,000 கிலோவிற்கும் மேற்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்தல், விலங்குகளைப் பாதுகாத்தல், கடற்கரை துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் அனைத்துலக லோட்டரி அமைப்பிடம் இருந்து பொறுப்புடைமைமிக்க எண் அதிர்ஷ்டக் குலுக்கல் சான்றிதழின் அதிகப்பட்ச அடைவுநிலையைப் பெற்ற நாட்டின் முதல், ஒரே என்எஃப்ஓ நிறுவனமாகவும் மெக்னம் விளங்குகின்றது.

இது குறித்து பேசிய இந்தக் குழுமத்தின் தலைமை கமர்ஷியல் அதிகாரியும் செயல் உதவித் தலைவருமான டத்தோ சான் சீஃபாய், இந்த அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கின்றது.

வருங்காலங்களிலும் தொடர்ந்து சமூகப் பணிகளை ஆற்றுவதற்கு இந்த அங்கீகாரம் எங்களுக்கு உந்துசக்தியாகவும் அமைகின்றது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here