புத்ராஜெயா:
வரும் ஆகஸ்ட் 31, 2023 தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பாத்திக் உடை அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
இதன்முலம் இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் பாத்திக் தொழில்துறைக்கான வலுவான ஒரு ஆதரவாகவும் இருக்கும் என்றார் அவர்.
2023 ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பாத்திக் ஆடை மற்றும் ஃபேஷனை ஊக்குவிக்கவும், சிறப்பிக்கவும் விரும்புகிறோம், இது அனைத்து மலேசியர்களும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.
வரும் வியாழன் அன்று டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான தேசிய தின கொண்டாட்டங்கள், அமைச்சர்கள், விஐபி விருந்தினர்கள் மற்றும் செயலக உறுப்பினர்கள் என 400 பேருக்கு மேல் மலேசிய பாத்திக் உடைகளை அணிவிப்பதால், இந்த நிகழ்ச்சி கூடுதல் துடிப்புள்ள நிகழ்ச்சியாக அமையும் என்று அவர் கூறினார்.









