பிரதமர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

கோலாலம்பூர்: கெடாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மசாஜ் செய்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) மதியம் 2.30 மணியளவில் கெடாவிலுள்ள கோலா மூடாவில் 41 வயதான அந்த நபரை போலீஸார் கைது செய்ததாக புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் ஹுஹைலி ஜெஃன் கூறினார்.

“’JoeJebatTajuddin” என்று அழைக்கும் பயனரின் முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் குறித்து சனிக்கிழமை (ஆக. 26) பிற்பகல் 3.24 மணிக்கு எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. மேலும் விசாரணைக்குப் பிறகு, சந்தேக நபரை அடையாளம் கண்டு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 28) கைது செய்தோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சந்தேகநபர் மூன்று போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் குற்றப் பின்னணி கொண்டவர் என சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர் நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here