மலாக்கா ஆளுநர் பிறந்த நாளில் பல இந்தியர்களுக்கு விருதுகள்

News By Our Reporter R.Malini

மலாக்கா மாநில ஆளு நர் துன் ஸ்ரீ செத்யா டாக்டர் அலி முகமட் ருஸ்தாம் அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு மற்று மூன்றாவது பிரிவிற் கான விருதளிப்பு விழா ஆயேர்குரோ ஸ்ரீ மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பின் தோற்றுநரும்,அருள்மிகு போர்ட் கிள்ளான் -ஸ்ரீ நாகம்மாள் ஆலயத் தலைவரும் தொழில் அதிபரும், சமூகச் சேவைச் நெஞ்சருமான டத்தோ பாலன் குமரன் எம் சன்னாசி,தேசிய ம.இ.கா தலைமைச் செயலாளர் டத்தோ ஆர்.தி இராஜசேகரன் , தேசிய ம.இ.கா உச்ச மன்ற உறுப்பினரும் , மூவார் நகராண்மை கழக உறுப்பினருமான டத்தோ எஸ். தமிழ்வாணன், மஹா ரஜா டெக்ஸ்டைல் தலைமை இயக்குனர் டத்தோ எஸ் ராஜசேகரன் , AZ HEALTHCARE S/B தலைமை இயக்குனரும் தொழில் அதிபரும் , சமுதாய தொண்டருமான டத்தோ டாக்டர் ஷாபீக் முகமட் பின் முகமட் தஜூடின் ஆகியோர் டார்ஜா பங்குவான் ஸ்ரீ மலாக்கா,(டிபிஎஸ்எம்) எனும் உயரிய “ டத்தோ “ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.

அவர்களை தொடர்ந்து மலாக்கா மாநில அலோர்காஜா ம.இ.கா தொகுதியின் பொரு ளாளரும் புக்கிட் புத்துஸ் ம.இ.கா கிளைத் தலைவரும் தொழில் அதிபருமான அ.கிருஷ்ணராஜன் டார்ஜா கெமிலாங் ஸ்ரீ மலாக்கா எனும் டிஎஸ்எம் விருது வழங்கப்பட்டது.

நாட்டிற்கும் மாநில அரசிற்கும் ,சமுதாயத்திற்கும் பல வகைகளில் சேவையாற்றிய ம.இ.கா , ஜசேக, ஐபிஎப் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரதி நிதிகள் ,அரசு சாரா இயங்களின் தலைவர்கள் , உறுப்பினர்கள் என 1042 பேர் பிகேஎல்,பிசிஎம்,பிகேடி, பிஜேகே,பிபிஎம் விருதுகளை ஆளுநரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

(விருதுகளை பெற்ற பிரமுகர்களின் படங்கள் இதோ…)

    


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here