Lycaவின் அடுத்த படத்தில் விஜய்யின் மகன்

Lyca Productions’ன் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

அறிமுக இயக்குனர் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கும் புதிய திட்டத்தை LYCA தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Lyca Productions’ தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கூறும்போது, Lyca Productions’ எப்போதுமே இளம் மற்றும் புத்தம் புதியவர்களுக்கு வாய்ப்பினை வழங்குவதை யிட்டு பெருமிதம் கொள்கிறது. எங்களின் அடுத்த திட்டத்தை ஜேசன் சஞ்சய் விஜய் இயக்குவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம், இது ஒரு தனித்துவமான கதை என்றார் அவர்.

மேலும் ஜேசன் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் BA (Hons) சரியான கல்விப் பின்னணியைக் கொண்டுள்ளார், அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளோமாவும் பெற்றுள்ளார். அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அது புதிய பாணியில் அற்புதமான படைப்பாக இருந்தமையால் நாங்கள் முழு திருப்தி அடைந்தோம் என்றார் சுபாஸ்கரன்.

ஜேசன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்க்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள், மேலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க தொழில்துறையைச் சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

இயக்குனர் ஜேசன் சஞ்சய் விஜய் கூறுகையில், “Lyca Productions’ போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. இது திறமையாளர்களை ஊக்குவிக்கும் மையமாகவும் இருப்பது மிகுந்த மகிழ்சியாக உள்ளது என்றும். இந்த வாய்ப்புக்காக சுபாஸ்கரனுக்கு  நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here