மலாக்கா:
ஜாசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் சைட் யூசோப் தனது 70வது வயதில் காலமானார்.
முகமட் சைத் நேற்று இரவு 8.10 மணியளவில் மலாக்கா மருத்துவமனையில் காலமானார் என்பதை அவரது மகள் நூர் அதாவியா உறுதிப்படுத்தினார்.
“முகமட் சைத் இதய பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பரில் இருந்து அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார் ” என்று அவர் கூறினார்.
இன்று பாடாங் டெமு மைய்யத்து கொல்லையில் தனது தந்தையின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று நூர் அதாவியா கூறினார்.