நிதிப் பற்றாக்குறை விகிதத்தை 4.3 விழுக்காடாக குறைக்க அரசு முயற்சி – பாஹ்மி

கோலாலம்பூர்:

ந்த ஆண்டு நாட்டின் நிதி பற்றாக்குறையை 4.3 விழுக்காடாகக் குறைக்க ஒற்றுமை அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 5.6 விழுக்காடாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது என்றார்.

நாட்டை சரியான பொருளாதாரத்தில் வைத்திருக்க, முதலீட்டு பொருளாதார அடிப்படைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், புதிய வேலை வாய்ப்புகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாஹ்மி கூறினார்.

“இந்த மூன்று அடிப்படைகளைப் பார்க்கும்போது, ​​சரியான பொருளாதாரத்தின் அடிப்படையில் நாங்கள் பயணிக்கிறோம். உதாரணமாக வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது, பணவீக்கம் குறைந்து, அன்னிய நேரடி முதலீடு (வெளிநாட்டு நேரடி முதலீடு) அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று கூறிய ஃபாஹ்மி, அன்னிய நேரடி முதலீடு மூலம் குறித்த காலப்பகுதியில் RM17.1 பில்லியன் முதலீட்டை பதிவு செய்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here