குனுங் தெபுவில் காணாமல் போன ஐவர் பாதுகாப்பாக மீட்பு

ஜெர்தி :

டந்த வியாழக்கிழமை முதல் ஜாபியில் உள்ள குனுங் தெபுவில் காணாமல் போன ஐந்து பேர் கொண்ட குழு, இன்று காலை 9.15 மணியளவில் அருகிலுள்ள பொழுதுபோக்கு பகுதியில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

23 முதல் 39 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களும் அடர்ந்த காட்டில் இருந்து மலையின் அடிவாரத்தில் உள்ள Lata Belatan நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பெசூட் மாவட்ட காவல்துறைத் துணைத் தலைவர் DSP அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.

இன்று காலை 8 மணிக்குத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்ததாகவும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த 55 பேர் கொண்ட குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும், அவர்களுடன் அக்கிராமத்தை சேர்ந்த ஒன்பது மலை வழிகாட்டிகளும் தேடுதலில் இணைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

“ஆரம்பத்தகவல்களின் அடிப்படையில் வியாழன் அன்று மலைப்பகுதியில் மூன்று நபர்கள் காணாமல் போயுள்ளனர் என்று கூறப்பட்டது, அனால் இன்று ஐவர் மீட்கப்பட்டனர் என்றும் கூறிய அவர், குறித்த ஐந்து பேரும் பெசூட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது, என்றும் கூறினார்.

புக்கிட் துங்கல், கோலா திரெங்கானுவைச் சேர்ந்த ஐவரில் ஒருவர் கூறும்போது, வியாழன் காலை 11.30 மணியளவில் குனுங் தெதங்களது புவில் ஏறும் முயற்சியை மேற்கொள்வதற்கு முன், குழு பொழுதுபோக்கு பகுதிக்கு வந்ததாகக் கூறினார்.

“இருப்பினும், மாலை 4.30 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நாங்கள் கீழே செல்ல முடிவு செய்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் தொலைந்து போனோம் என்று கூறினார் அவர்.

“நாங்கள் எங்கள் வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம், ஆனால் தோல்வியுற்றதால், ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகில் இரவைக் கழிக்க வேண்டியிருந்தது. இன்று காலை நாங்கள் ஒரு ஆற்றை பின்தொடர்ந்து சென்றபோது, அது எங்களை குறித்த பொழுதுபோக்கு இடத்திற்கு அழைத்துச் சென்றது, ”என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here