கோலாலம்பூர்:
நாட்டில் வலுவான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும் அனைத்துத் தரப்பினருக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லாஹ் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
தேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர வேண்டும் என்றும், மக்கள் தொடர்ந்து சிறந்த வாழ்வாதாரத்துடன் வாழ்வதை உறுதிச்செய்ய அனைத்து தரப்பினரும் பொருளாதாரத்தை சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும் என பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் விரும்புவதாக இஸ்தானா நெகாராவின் அரச முத்திரைக் காப்பாளர், மேஜர் ஜெனரல் டத்தோ ஜஹாரி முகமட் ஆரிஃபின் கூறினார்.
கோவிட் -19க்கு பிறகு உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி நிலைமைகள் மெதுவான நிலையை எதிர்கொண்ட போதிலும், 2023 இன் முதல் பாதியில் 4.2 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வரும் மலேசியாவின் பொருளாதாரத்தின் நிலையை கண்காணித்து வருவதாகவும் ” ஜஹாரி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.















