சூர்யவன்ஷி 15 வயதில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை!

இந்தியாவின் 15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 53 பந்துகளில் 204 ஓட்டங்களைக் குவித்து, கிரிக்கெட் அரங்கில் இரண்டு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

கத்தாரின் தோஹாவில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணியை இந்திய ‘ஏ’ அணி 7 விக்கெட்டுகளால் வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 8 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது.

250 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணிக்காக சூர்யவன்ஷி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி, 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 204 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன்மூலம், பட்டியல் ‘ஏ’ (List A) கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் மற்றும் அதிவேக இரட்டைச் சதம் ஆகிய இரண்டு சாதனைகளையும் அவர் படைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here