கோலாலம்பூர்:
வாங்சா மாஜூவில் 27 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய நால்வரை போலீஸ் தேடிவருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனரான சந்தேகநபர் நேற்று இரவு (செப்டம்பர்.5) இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வுப் பிரிவு (D11) துணை இயக்குநர் சித்தி கம்சியா ஹாசன் தொடர்பு கொண்டபோது, அவர் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 30 அன்று வாங்சா மாஜுவில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து ஆண்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி புகாரளித்ததாக வாங்சா மாஜூ மாவட்ட காவல்துறை தலைவர் அசாரி அபு சமா தெரிவித்திருந்தார்.