கிள்ளான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடு ஜூன் மாதம் காணாமல் போனவருடையதா?

கிள்ளான் பகுதியில் உள்ள வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஜூன் மாதம் காணாமல் போன ஒரு மனிதனுடையதாக இருக்கலாம் என்று சிலாங்கூர் காவல்துறை கூறுகிறது. ஆகஸ்ட் 27 அன்று ஜாலான் கெபூனில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டின் பிரேதப் பரிசோதனையில் அது சுமார் 30 வயதுடையது என்றும் இது காணாமல் போன நபரின் தகவலுடன் ஒத்துப்போகிறது என்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர்  டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

இரண்டு வழக்குகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை தேவை என்று அவர் மேலும் கூறினார். டிஎன்ஏ சோதனை முடிவடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்றார். இந்த வழக்கில் குற்றவியல் கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய விசாரணைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

புதனன்று (செப். 6) சிப்பாங் காவல்துறை தலைமையகத்தில் வழக்குப் பொருட்களை அகற்றிய பின்னர் செய்தியாளர்களிடம்  உசேன் இவ்வாறு கூறினார். RM216,318.26 என மதிப்பிடப்பட்ட வழக்குப் பொருட்கள், சட்டவிரோத கிரிப்டோகரன்சி சுரங்கம் உட்பட எட்டு வழக்குகளுடன் தொடர்புடையவை என்று அவர் கூறினார். ஆறு வழக்குகள் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளன. மற்றவை மேல் நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here